யானைத் தாக்கத்தினால் சொத்துக்கள் பாதிப்படைந்த நபர்களுக்கான நஷ்ட ஈட்டுத்தொகை 1,854,200/- ற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு
கடந்த வருடம் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் யானைத் தாக்கத்தினால் காரைதீவு-07,10,11,12,மாவடிப்பள்ளி-கிழக்கு மற்றும் மாவடிப்பள்ளி-மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சொத்துக்கள் பாதிப்படைந்த 27 நபர்களுக்கான நஷ்ட ஈட்டுத்தொகை 1,854,200/- ற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில், அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்பில் இன்று புதன்கிழமை (2024.07.17) காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.பார்த்தீபன், நிருவாக கிராம உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



























